Press "Enter" to skip to content

அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கான நேரம் குறைப்பு- முதல்வர் பழனிசாமி

நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு எச்சரித்து வருகிறது. ஊரடங்கு தடை உத்தரவை மீறியும் சிலர் அலட்சியமாக செயல்படுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இது பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேர கட்டுப்பாட்டை அனைத்து பொதுமக்களும் கடைபிடிக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்க அரசுடன் சமூக ஆர்வலர்கள் இணைந்து செயல்படலாம்.

கொரோனா தொற்று அனைவரையும் தாக்கக்கூடியது. மதச்சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பபட்டுள்ளது.

விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சந்தைகளில் காலை நேரத்தில் சமூக விலகலை கடைபிடிக்க தன்னார்வலர்கள் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »