Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பு பணிக்கு மேலும் 2,570 செவிலியர்களை பணியமர்த்த முதலமைச்சர் உத்தரவு

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் 2,570 ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணியில் 2,323 செவிலியர்கள் ஏற்கனவே பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து 6 மாத காலங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2,570 செவிலியர்களை பணியமர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. செவிலியர்கள் ஆணை கிடைக்கப்பெற்ற மூன்று தினங்களுக்குள் பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்களும், தாலுக்கா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்களுக்கும் பணியமர்த்தப்படுவார்கள்.

இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »