Press "Enter" to skip to content

உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது: பிரதமர் மோடி உரை

உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி உலக வளர்ச்சிக்கு வித்திடும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பாரத பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஐந்தாவது முறையாக உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

1. உலகளவில் சுமார் 2.75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.

2. ஒரு வைரஸ் உலகத்தில் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. 

3. உலகளவிலான பொது முடக்கத்தை மக்கள் இதுவரை பார்த்தது இல்லை

4. போராடி உயிரையும் காக்க வேண்டும். முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.

5. மக்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது.

6. நான்கு மாதங்களாக இந்தியா கடுமையாக போராடி வருகிறது.

7. இந்தியாவில் கொரோனா தாக்கம் 70 ஆயிரத்தை தாண்டியதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.

8. கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற உலகமே முயற்சி செய்து வருகிறது.

9. கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தை இந்தியா முன்னின்று நடத்த வேண்டும்.

10. உலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

11. வைரசுக்கு எதிரான போரில் நாம் முக்கிய கட்டத்தில் இருக்கிறோம்.

12. இந்தியாவுக்கு முக்கியமான வாய்ப்பை இந்த சூழ்நிலை கொண்டு தந்திருக்கிறது.

13. பிபிஇ தயாரிப்பு முன்பு இந்தியாவில் கிடையாது. தற்போது தினசரி 2 லட்சம் பிபிஇ மற்றும் N95 முகக்கவசங்கள் தயாரித்து வருகிறோம்

14. உலகிற்கு இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி உலக வளர்ச்சிக்கு வித்திடும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »