Press "Enter" to skip to content

இந்தியாவில் மேலும் 13 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா

இந்தியாவில் மேலும் 13 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கப் போராடும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரைக் குறிவைத்து கொரோனா வைரஸ் தாக்க தொடங்கி விட்டது கொரோனா.

இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் 500-க்கும் அதிகமான டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

மேலும், பிற நாட்டு ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எல்லையில் இரவு பகலாக பாடுபடும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்களையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.

ஏற்கனவே சுமார் 250-க்கும் அதிகமான பி எஸ் எப் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் மேலும் புதிதாக 13 பி.எஸ்.எப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில்  திரிபுரா, கொல்கத்தாவில் தலா ஒருவர், டெல்லியில் 11 பேர் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »