Press "Enter" to skip to content

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டியது

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்துள்ளது.

மாஸ்கோ:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 44.89 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்யா நாட்டில் ஆரம்ப காலகட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நிலையில், தற்போது அங்கு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  

இந்நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 9, 974 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2.5 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு இதுவரை அங்கு 2,305 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு கொரோனா தொற்றில் இருந்து 53,530 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் ஸ்பெயினும், 3-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »