Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பு நடவடிக்கை – பில்கேட்சுடன் காணொலி காட்சியில் பிரதமர் மோடி உரையாடல்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பில் கேட்சுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாடினார்.

புதுடெல்லி:

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும், 2500க்கும் மேற்பட்டோ உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பில் கேட்சுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம்  உரையாடினார்.

இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தலைவர் பில்கேட்ஸ் உடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாடினார்.

அப்போது, கொரோனா வைரஸ் உலக நாடுகளில் ஏற்படுத்தி உள்ள தாக்கம், வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் ஒருங்கிணைந்து வைரசுக்கு எதிராகப் போராடுவது குறித்து இருவரும் விவாதித்தனர்.

கொரோனாவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றுக்கும் கேட்ஸ் அறக்கட்டளை உதவுவதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார என குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தனது அறக்கட்டளை மூலம் சுமார் ரூ.70 கோடி வழங்குவதாக அவர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »