Press "Enter" to skip to content

நிதி மந்திரியின் அறிவிப்பால் விவசாயிகளின் வருமானம் பெருகும் -பிரதமர் மோடி

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்த திட்டங்களால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும், அனைத்துத் தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் முதல் வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, மூன்றாவது நாளாக செய்தியாளர்களுக்குப் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார். அப்போது தன்னிறைவு திட்டத்தில் 11 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 8 திட்டங்கள் விவசாயத்துறை உள்கட்டமைப்புக்காக இருக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்த திட்டங்களால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்த திட்டங்களை வரவேற்கிறேன். இது கிராமப்புற பொருளாதாரம், நமது கடின உழைப்பாளிகளான விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் துறைகளுக்கு உதவும். குறிப்பாக வேளாண்மைத் துறைக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன். விவசாயிகளின் வருமானத்தை இது அதிகரிக்கச் செய்யும் என பதிவிட்டுள்ளார்

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »