Press "Enter" to skip to content

புகையிலை விற்பனையை தடை செய்யுங்கள்- மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் வலியுறுத்தல்

புகையிலை விற்பனையை தடை செய்ய வேண்டும் என அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதன் மூலமே இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில், புகையிலை விற்பனையை தடை செய்ய வேண்டும் என அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷவர்தன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்புவதைத் தடுக்கும் வகையில் புகையிலை பொருட்கள் விற்பனையைத் தடை செய்ய வேண்டும்.

புகை வராத புகையிலை பொருட்களும் தூய்மையற்ற சூழலை உருவாக்கும் வாய்ப்புள்ளது. இந்த சூழல், கொரோனா வைரஸ் பரவலை மேலும் அதிகரிக்கும். புகை வராத புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் பெரும் கூட்டங்கள் கூடுகின்றன. இது மூலமாகவும் கொரோனா பரவும் அபாயம் அதிகம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »