Press "Enter" to skip to content

பஞ்சாப்பில் பொதுமுடக்கம் மே 31 வரை நீட்டிப்பு – முதல் மந்திரி அமரீந்தர் சிங்

பஞ்சாபில் பொது முடக்கம் மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

சண்டிகர்:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, சில நாட்களுக்கு முன் ஊரடங்கு தொடர்பாக அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பொது முடக்கம் மே 31 வரை நீட்டிக்கப்படுகிறது என முதல் மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பஞ்சாப்பில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு திங்கட்கிழமை முடிவுக்கு வருகிறது. அதேவேளையில், பொதுமுடக்கம் மே 31-ம் தேதி வரை நீடிக்கும்.

மேலும், கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட உள்ளன. குறைந்த அளவில் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படும். எனினும், பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »