Press "Enter" to skip to content

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 65 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக, சவுதி அரேபியாவில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டின் சுகாதார துறை தெரிவித்தது.

சிகிச்சை பெறும் நோயாளிகள்

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக, சவுதி அரேபியாவில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டின் சுகாதார துறை தெரிவித்தது.

ரியாத்:

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,532 பேருக்கு கொரோனா பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு  65,077 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில்12 பேர் பலியானதை அடுத்து, அங்கு பலி எண்ணிக்கை 351 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »