Press "Enter" to skip to content

மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு

தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

சென்னை:

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனை கருத்தில் கொண்டு மீன்பிடி தடைக்காலத்தை 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைக்க வேண்டுமென மீனவர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இதையடுத்து தமிழகம், புதுச்சேரி அரசுகள் மற்றும் தேசிய மீனவர் பேரவை உள்ளிட்ட மீனவர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மத்திய மீன்வள அமைச்சகம், கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்களுக்கான வங்க கடல் மீன்பிடி தடை காலத்தின் அளவை 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஆகஸ்ட் 1 முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »