Press "Enter" to skip to content

அரியானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

அரியானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

சண்டிகர்:

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 4-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அரியானா மாநிலத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல், பொது இடங்களில் எச்சில் துப்பினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »