Press "Enter" to skip to content

பாட்னாவில் சோகம் – கட்டுமான பணியின்போது சிலாப் விழுந்து 3 குழந்தைகள் பலி

பீகார் தலைநகர் பாட்னாவில் கட்டுமான பணியின் போது சிலாப் விழுந்து 3 குழந்தைகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா:

பீகார் மாநில தலைநகரான பாட்னாவில் ஜவகர்லால் நேரு மார்க் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

நேற்று காலை கட்டுமான பணியின்போது சிலாப் திடீரென இடிந்து விழுந்தது. சிலாப்பின் கீழே 3 குழந்தைகள் சிக்கிக் கொண்டனர். 

இதையடுத்து, உடனடியாக அந்த குழந்தைகளை மீட்டுஅருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 குழந்தைகளும் பரிதாபமாக பலியாகினர் என டாக்டர்கள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக, பாட்னா கலெக்டர் ரவிகுமார் கூறுகையில், சிலாப் விழுந்து படுகாயம் அடைந்த 3 குழந்தைகளும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். விபத்தில் பலியான 3 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

கட்டுமான பணியின் போது சிலாப் விழுந்து 3 குழந்தைகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »