Press "Enter" to skip to content

தமிழகத்தில் இருந்து 2.28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைப்பு

தமிழகத்தில் இருந்து 2.28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசிடம் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது.

புதுடெல்லி:

புலம்பெயர் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதி கிடைக்காமல் நடந்து செல்லும் நிலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாணை நடத்துகிறது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது,  புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல எத்தனை நாட்களாகும்? ரெயில் பயணத்திற்கு முன்பதிவு செய்தாலும் வாரக்கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்புடையதாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது தமிழகத்தில் இருந்து சுமார் 2.28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்தாக தமிழக அரசு அறிக்கை அளித்திருப்பதாக மத்திய அரசு கூறியது.

‘தமிழகத்தில் இருந்து 2,22,600 பேர் ரயில்கள் மூலமும், 5,200 பேர்  பேருந்துகள் மூலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 178 முகாமில் உள்ள 28,000 பேருக்கு உணவு அளிக்கப்படுகிறது. சொந்த இருப்பிடங்களில் தங்கியுள்ள 70 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது. 3,17,000 பேருக்கு ரேஷனில் உணவும், தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது’ எனவும் தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 3.36 லட்சம் தொழிலாளர்கள் வீதம் இதுவரை 47 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »