Press "Enter" to skip to content

மேற்கு வங்காளத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்கு வங்காள மாநிலத்தில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது 4-ம் கட்ட பொதுமுடக்கம் நாளைமறுநாள் உடன் முடிவடைகிறது. அதன்பின்பும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 65 நாட்களுக்கு மேலாக எந்தவொரு வழிபாட்டு தலங்களும் திறக்கப்படாமல் உள்ளன. பொதுமக்கள் அதிகமாக கூடினால் கொரோனா தொற்று வேகமாக பரவிவிடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து மேற்கு வங்காளத்தில் இந்து கோவில்கள், மசூதி, குருத்வாரா உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும். ஆனால் 10 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மதம் தொடர்பான இடங்களில் கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »