Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உங்கள் மனைவி போன்றது – மந்திரி பேச்சுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்

கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது என பேசிய இந்தோனேசிய மந்திரிக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,496 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், வைரஸ் இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட  பல மடங்கு அதிகம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

இதற்கிடையே, இந்தோனேசிய நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி முகமது மஹ்புத் இந்த வார தொடக்கத்தில் உள்ளூர் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

நம் உடல் நலத்தில் கவனம் செலுத்தினால் கொரோனா நிலைமையை சரிசெய்ய முடியும். கொரோனா உங்கள் மனைவியைப் போன்றது. ஆரம்பத்தில் நீங்கள் அதை கட்டுப்படுத்தவில்லை என்றால் பிறகு உங்களால் முடியாது என்பதை நீங்கள் உணருங்கள். பிறகு நீங்கள் அதனுடன் வாழக் கற்றுக்கொள்வீர்கள் என தெரிவித்தார்.

இந்நிலையில், பாதுகாப்புத் துறை மந்திரியின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு சமூக அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக, மகளிர் ஒற்றுமை குழுவின் தலைமை நிர்வாகி டிண்டா நிசா யூரா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் பொது அதிகாரிகளின் பாலியல் மற்றும் தவறான மனநிலையை இது காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »