Press "Enter" to skip to content

Paytm மூலம் பேருந்து கட்டணம் வசூல்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தகவல்

அரசு பேருந்துகளில் பரிசோதனை முயற்சியாக Paytm மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும். காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ள மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் ஓடத்தொடங்கும். அரசு பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

அரசு பேருந்து ஊழியர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லை. 2 அரசு பேருந்துகளில் பரிசோதனை முயற்சியாக Paytm மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்த வரை மின்னணு முறையை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »