Press "Enter" to skip to content

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலி ஏதும் இல்லை

ஸ்பெயின் நாட்டில் கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தப்படியாக ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மே முதல் வாரம் வரை கொரோனா சுழற்றி அடித்தது.

இதுவரை ஸ்பெயினில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 27,127 பேர் உயிரிழந்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் இருந்து பலியானோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. ஏப்ரல் 2-ந்தேதி உச்சக்கட்டமாக 950 பேர் ஒரு நாளில் உயிரிழந்தனர். அதன்பின் உயிரிழப்பு படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பலி ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 70 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதத்தில் இருந்து ஸ்பெயின் அரசு பல்வேறு தளர்வுகளை அறித்துள்ளது. மலாகாவில் உள்ள கடற்கரை பகுதிகள் மக்களுக்காக  திறந்து விடப்பட்டுள்ளன.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »