Press "Enter" to skip to content

நிசர்கா புயல் எதிரொலி – மும்பையில் நாளை 17 விமானங்கள் ரத்து

நிசர்கா புயல் எதிரொலியால் மும்பையில் நாளை புறப்பட வேண்டிய 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பை:

அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு நிசர்கா என பெயரிடப்பட்டுள்ளது.
 
நிசர்கா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுஉள்ளது.

நிசர்கா புயல் காரணமாக, மேற்கு இந்திய பகுதிகள், குறிப்பாக மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் (மும்பை, பால்கர், தானே, ராய்காட்) மணிக்கு 115 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அடுத்த இரு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிசர்கா புயல் எதிரொலியால் மும்பையில் நாளை புறப்பட வேண்டிய 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நாளை 17 விமானங்களை ரத்து செய்துள்ளது. 3 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஏர் ஏசியா, ஏர் இந்தியா, கோ ஏர், ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் நாளை மும்பைக்கு வருகை தரும் 12 விமானங்களை மட்டுமே இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »