Press "Enter" to skip to content

திருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம், கோவிலில் நடக்கும் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் 10-ந்தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

வரும் 8, 9 ஆகிய தேதிகளில் தேவஸ்தான ஊழியர்கள் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். 11-ந்தேதி தேதி முதல் அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

தினமும் ஆன்லைனில் டிக்கெட் வெளியிட்டு 3000 பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட இருக்கிறது. முன்பதிவு செய்யாதவர்களுக்கு திருப்பதி மலை அடிவாரத்தில் கவுண்டர் அமைத்து டிக்கெட் விநியோகம் செய்யப்படும்.

ஒரு மணி நேரத்தில் 500 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மட்டுமே ஏழுமலையான தரிசிக்க அனுமதி வழங்கப்படும். ஸ்ரீவாரிமெட்டு வழியாக பக்தர்கள் நடந்து திருப்பதி மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »