Press "Enter" to skip to content

உணவகங்கள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் ஜூன் 8 முதல் உணவகங்கள் திறக்கவுள்ள நிலையில் சில குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை:

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தளர்த்தின. இதனால் நிபந்தனைகளுடன் கடைகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. வாகன போக்குவரத்துக்கு இருந்து வந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளன. உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது. என்றாலும் பஸ், ரெயில்கள் ஓடாததால் மக்களின் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

இந்தநிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  அன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியது.  அதன் படி ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஜூன் 8-ம் தேதி முதல் ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்ஸ் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் உணவகம் திறப்பு மற்றம் அதன் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தகவல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன் விபரங்கள்…

* உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.

* உணவகங்களில் நுழைவதற்கு முன் வாடிக்கையாளர்கள் கைகழுவ சோப்பு, சானிடைசர் வைத்திருக்க வேண்டும்.

* உணவகங்களில் 50 சதவிகிதம் இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர் அமர்ந்து உணவு உண்ண அனுமதி

* உணவகங்களில் சாப்பிடும் டேபிள்களுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

* உணவகங்களில் ஏசி பயன்படுத்தக் கூடாது.  

* ஜன்னல்கள் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருக்க வேண்டும்.

* உணவகங்களில் உள்ள கழிவறைகளை நாள்தோறும் 5 முறை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.

* உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட பின் நாற்காலி மற்றும் டேபிளை கிருமி நாசினி கலந்த நீரால் சுத்தம் செய்ய வேண்டும்.

* உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக உணவகங்களில் அனுமதிக்கக்கூடாது.

* பணியாளர்கள் அனைவரும் முககவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

* அரிசி, பருப்பு, காய்கறிகள், போன்றவை சமைப்பதற்கு முன் நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.

உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகு அரசு வெளியிட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »