Press "Enter" to skip to content

கொரோனா அப்டேட் – உலகளவில் கொரோனாவுக்கு 4.08 லட்சம் பேர் பலி

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,08,240 ஆக அதிகரித்துள்ளது

ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
 
தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 71,89,861 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 4,08,240 ஆக அதிகரித்துள்ளது..

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 35,30,766 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 19,037 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 20,26,486 ஆக உயர்ந்தது.  மேலும் அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 586 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 1,13,055 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் ஒரே நாளில் 18,925 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 7,10,887 ஆக அதிகரித்தது. ரஷ்யாவில் 4,76,658, ஸ்பெயினில் 2,88,797, பிரிட்டனில் 2,87,399 பேருக்கும், இத்தாலியில் 2,35,278, ஜெர்மனியில் 1,86,205, பெருவில் 1,99,696, துருக்கியில் 1,71,121, ஈரானில் 1,73,832, பிரான்ஸ் 1,54,188,   சீனாவில் 83,040 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »