Press "Enter" to skip to content

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்… 24 மணி நேரத்தில் 9987 பேருக்கு தொற்று

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.66 லட்சத்தை தாண்டிய நிலையில், 1.29 லட்சம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

புதுடெல்லி:

இந்தியாவில் இதுவரை 266598 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில், அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 9987 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 331 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7466 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 129215 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 88528 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 33229 பேருக்கும், டெல்லியில் 29943 பேருக்கும், குஜராத்தில் 20545 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அந்தமான் நிகோபார் தீவுகள் – 33
ஆந்திர பிரதேசம் – 4851
அருணாச்சல பிரதேசம் – 51
அசாம் – 2776
பீகார் – 5202
சண்டிகர் – 317
சத்தீஸ்கர் – 1160
தாதர் மற்றும் நாகர் ஹவேலி – 22
டெல்லி – 29943
கோவா – 330
குஜராத் – 20545
அரியானா – 4854
இமாச்சல பிரதேசம் – 421
ஜம்மு – காஷ்மீர்- 4285
ஜார்க்கண்ட் – 1256
கர்நாடகா – 5760
கேரளா – 2005
லடாக் – 103
மத்திய பிரதேசம் – 9638
மகாராஷ்டிரா – 88528
மணிப்பூர் – 272
மேகாலயா – 36
மிசோரம் – 42
நாகலாந்து – 123
ஒடிசா – 2994
புதுச்சேரி – 127
பஞ்சாப் – 2663
ராஜஸ்தான் – 10763
சிக்கிம் – 7
தமிழ்நாடு – 33229
தெலுங்கானா – 3650
திரிபுரா – 838
உத்தரகாண்ட் – 1411
உத்தர பிரதேசம் – 10947
மேற்கு வங்காளம் – 8613

மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உள்படுத்தப்பட்ட நோயாளிகள்-8803

மொத்தம் – 266598.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »