Press "Enter" to skip to content

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் மத்திய உயர்மட்டக்குழு

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 50 மாவட்டங்களில் மத்தியக் குழு களம் இறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதனால் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தியா முழுவதும் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் நகராட்சிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த இடங்களுக்கு உயர்மட்ட மத்தியக்குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் மத்திய குழு பயன்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா (ஏழு மாவட்டங்கள் மற்றும் நகராட்சி), தெலுங்கானா (நான்கு), ராஜஸ்தான் (ஐந்து), அசாம் (ஆறு), அரியானா (நான்கு), குஜராத் (மூன்று), கர்நாடகா (நான்கு), உத்தரகாண்ட் (மூன்று), மத்திய பிரதேசம் (ஐந்து), மேற்கு வங்காளம் (மூன்று), டெல்லி (மூன்று), பீகார் (நான்கு), உத்தர பிரதேசம் (நான்கு), ஒடிசா (ஐந்து) மாநிலங்களிலும் மத்திய குழு களம் இறக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள் பரிசோதனைகள், மில்லியன் மக்களுக்கு குறைந்த சோதனை, அடுத்த இரண்டு மாதங்களில் திறன் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து, படுக்கை வசதி குறைபாடு, உயரவும் பலி எண்ணிக்கையின் சதவீதம், உறுதிப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, இரட்டிப்பு ஆகும் சதவீதம் உயர்தல், திடீரென சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்ற சாவல்களை திறம்பட எதிர்கொள்ள இந்த குழு உதவி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »