Press "Enter" to skip to content

பாகிஸ்தானிலும் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 4,646 பேருக்கு கொரோனா

பாகிஸ்தானில் கொரோனா வைரசுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

இஸ்லாமாபாத்:

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,08,317 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 646 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அங்கு கொரோனாவால் ஒரே நாளில் 105 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 2,172 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 35,018 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமானோர் பட்டியலில் உலக அளவில் பாகிஸ்தான் 16-வது இடத்தில் உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »