Press "Enter" to skip to content

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள்

வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ஒடிசாவில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜாஜ்பூர்:

ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பி உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பலர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். எனவே, சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே 100 நாள் வேலை திட்டத்தின் கீழ்  (தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்) வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

அவ்வகையில் பீகாரில் இருந்து சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு திரும்பிய தொழிலாளர்களுக்கு, 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு வழங்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதனால் அவர்கள் மன உளைச்சலில் இருந்து மீண்டுவருகின்றனர்.

இதுபற்றி ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் வேலை செய்து வரும் ஒரு தொழிலாளியிடம் கேட்டபோது, ‘நான் பீகாரில் கார்பெண்டராக வேலை செய்தேன். ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் ஊருக்கு வந்துவிட்டேன். இப்போது 6 நாட்களாக இங்கு வேலை செய்கிறேன். இந்த வேலை எனக்கு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் ’ என்றார்.

இந்த மாவட்டத்தில் மட்டும்  தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் 2916 திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக டிஆர்டிஏ திட்ட இயக்குனர் தெரிவித்தார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »