Press "Enter" to skip to content

கேரளாவில் புதிதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் மேலும் புதிதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் புதிதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என  அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, கேரளாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,159 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா வெளியிட்ட அறிக்கையில், கேரளாவில் புதிதாக 65 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 34 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 25 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள்.

இவர்களில் 10 பேர் கோழிக்கோடு, 9 பேர் திருச்சூர், 7 பேர் மலப்புரம், தலா 6 பேர் திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களையும், தலா 4 பேர் கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம் வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும், தலா 3 பேர் பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களையும், ஒருவர் ஆலப்புழா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

கேரளாவில் கொரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 905 ஆக உயர்ந்துள்ளது. தற்போது பல்வேறு மருத்துவ மனைகளில் 1,238 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »