Press "Enter" to skip to content

ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை:

தமிழக ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக் கூட்டல்களில் மாற்றம் செய்து தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

உதாரணமாக, எழும்பூரை ஆங்கிலத்தில் எக்மோர் என குறிப்பிட்டு வந்த நிலையில், இனி எழும்பூர் என்றே அழைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதேபோல், திருவல்லிக்கேணி என்று இருப்பதை triplicane என்று இனிமேல் உச்சரிக்கக் கூடாது திருவல்லிக்கேணி என்றே உச்சரிக்க வேண்டும். tuticorin என்பதை தூத்துக்குடி என அழைக்க வேண்டும். கோயம்புத்தூர் – KOYAMPUTHTHOOR, தரும‌புரி – THARUMAPURI, ஆலங்குளம் – AALANGGULAM, திருமுல்லைவாயல் – THIRUMULLAIVAAYAL, பூவிருந்தவல்லி – POOVIRUNTHAVALLI, மயிலாப்பூர் – MAYILAAPPOOR , சிந்தாதறிபேட்டை – CHINTHADHARIPETTAI, சைதாப்பேட்டை – SAITHAAPPETTAI என்றே அழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »