Press "Enter" to skip to content

மாநிலங்களவை தேர்தல் – தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவை தேர்தலில் தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

மாநிலங்களவையில் கர்நாடகத்தை சேர்ந்த 4 எம்.பி.க்களின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து அந்த 4 இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. மனு தாக்கல் 9-ம் தேதி நிறைவடைந்தது.

இதற்கிடையே, கடைசி நாளில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா  வேட்புமனு தாக்கல் செய்தார். கர்நாடக காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவருமான தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த அசோக் கஸ்தி, ரான் கடாடி என மொத்தம் 4 பேர் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »