Press "Enter" to skip to content

அமெரிக்கா வழங்கும் 100 வெண்டிலேட்டர்கள் 15ம் தேதி இந்தியா வந்தடைகிறது

அமெரிக்கா நன்கொடையாக அளிக்கும் 100 வெண்டிலேட்டர்கள் வரும் திங்கட்கிழமை இந்தியா வந்தடைகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்தை தாண்டிவிட்டது.

அமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பும், உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி இல்லாத கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம். மேலும், கொரோனாவை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்கா நன்கொடையாக அளிக்கவுள்ள வெண்டிலேட்டர்கள் வரும் திங்கட்கிழமை இந்தியா வந்தடைகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்காவில் இருந்து 10 வெண்டிலேட்டர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் 15-ம் தேதி இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கிறோம். அதன்பின்னர் அவை பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »