Press "Enter" to skip to content

கடிதம் எழுதும் போட்டியில் முதல் இடம் பிடித்த ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி

கடிதம் எழுதும் போட்டியில் கவர்னர் பகத்சிங்கோஷ்யாரி முதல் இடம் பிடித்து உள்ளார். அதற்கான பரிசு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை அஞ்சல் துறை அதிகாரிகள் ராஜ்பவனில் கவர்னர் பகத்சிங்கோஷ்யாரிடம் வழங்கினர்.

மும்பை :

மகாராஷ்டிரா மற்றும் கோவா வட்டார அஞ்சல் துறை சார்பில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி மாநில அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டி 18 வயதுக்கு உட்பட்டவர்கள், 18 வயது மேற்பட்டவர்கள் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியும் கலந்து கொண்டார். அவர் இந்தி பிரிவில் இன்லேன்ட் லெட்டரில் கட்டுரையை எழுதி இருந்தார். இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

கடந்த 2019-ல் அஞ்சல் துறை சார்பில் மும்பையில் நடந்த கண்காட்சியில் கலந்து கொண்ட கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, அந்த துறையை பாராட்டும் வகையில், கடிதம் எழுதும் போட்டியில் கலந்து கொள்வதாக அறிவித்து இருந்தார். எனவே தான் அவர் போட்டியில் கலந்து கொண்டார்.

இந்தநிலையில் கடிதம் எழுதும் போட்டியில் கவர்னர் பகத்சிங்கோஷ்யாரி முதல் இடம் பிடித்து உள்ளார். அதற்கான பரிசு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை அஞ்சல் துறை அதிகாரிகள் நேற்று ராஜ்பவனில் கவர்னர் பகத்சிங்கோஷ்யாரிடம் வழங்கினர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »