Press "Enter" to skip to content

20 வீரர்கள் வீரமரணம் – இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லடாக் மோதலில் இந்திய வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர் என முதற்கட்டாக தெரியவந்தது.

இந்நிலையில், இந்த மோதலில் படுகாயமடைந்த மேலும் 17 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இந்த மோதலில் சீன தரப்பில் உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்த வீரர்களின் மொத்த எண்ணிக்கை 43 என எ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.   

நேற்று நடந்த இந்த மோதலில் துப்பாக்கிச்சூடு எதும் நடைபெறவில்லை எனவும், இரு தரப்பு வீரர்களும் கற்கள், இரும்பு கம்பிகள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளதால் இந்தியா சீனா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »