Press "Enter" to skip to content

கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்கும் மருந்து கண்டுபிடிப்பு – இங்கிலாந்து சாதனை

கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையிலான மருந்தை இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டன்:

உலகையே உலுக்கி வரும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையிலான மருந்தை இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

டெக்சாமெத்தசோன் எனப்படும் இந்த மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொண்டால் அவர்களது இறப்பு விகிதம் குறைகிறது.

பரிசோதனை முயற்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 6 ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேருக்கு டெக்சாமெத்தசோன் மருந்து கொடுக்கப்பட்டது. இந்த மருந்தை எடுத்துக்கொண்ட வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில்:

வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்களில் உயிரிழப்பு வாய்ப்பு 40 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாக குறைந்துள்ளது.

ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்பவர்களில் உயிரிழப்பு வாய்ப்பு 25 சதவிகிதத்தில் இருந்து 20 ஆக குறைந்துள்ளது.

இந்த மருந்து கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகித்தை வெகுவாக குறைத்துள்ளது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளர் பீட்டர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த டெக்சாமெத்தசோன் மருந்து குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட மூத்த ஆராய்ச்சியாளர் மார்ட்டின் லேட்ரியின் ஆராய்ச்சியில்,

சராசரியாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் 8 பேரில் ஒருவர் உயிர் இந்த மருந்தால் காப்பாற்றப்படுகிறது.

சராசரியாக ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் 20 பேரில் ஒருவரது உயிர் இந்த மருந்தால் காப்பாற்றப்படுகிறது என்ற தகவலை கண்டுபிடித்துள்ளார்.

இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த டெக்சாமெத்தசோன் மருந்து உலக அளவில் பெரும்பாலான நாடுகளிடம் உள்ளதாகவும், இந்த மருந்துக்கான செலவும் மிகவும் குறைவு 

எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையிலான டெக்சாமெத்தசோன் மருந்து நிச்சயம் பலன் அளிக்கும் என இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »