Press "Enter" to skip to content

கேரளாவில் மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் நேற்று புதிதாக 97 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் நேற்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான விவரங்களை அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார். 

அந்த தகவலின் படி, அம்மாநிலத்தில் நேற்று புதிதாக 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 794 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 65 பேர் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள். 29 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

 எஞ்சிய 3 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று மட்டும் 89 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலத்தில்

கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,413 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,359 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதனால் கேரளாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், இன்று உயிரிழந்த நபர் கலால்துறையில் டிரைவராக வேலை செய்து வந்தவர் ஆவார். வைரஸ் பாதிக்கப்பட்ட எந்த நபருடனும் தொடர்பில் இல்லாத அவருக்கு எவ்வாறு வைரஸ் பரவியது என்பது குறித்து கேரள அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »