Press "Enter" to skip to content

இன்று முதல் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி விநியோகம்

முழு ஊரடங்கு அமல்பட்டுத்தப்பட்டுள்ள சென்னை உட்பட 4 மாவட்டங்களில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு, ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி இன்று முதல் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று விநியோகம் செய்யப்படுகிறது.

சென்னை:

கொரோனா பரவலை தடுக்க கடந்த வெள்ளிக்கிழமை முதல் 30 ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் நிவாரணத் தொகையாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாக இன்று முதல் 26 ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட ரேசன் கடை பணியாளர்கள் மூலமாக, குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடங்களுக்கே சென்று ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

எனவே, இன்று முதல் 26 ஆம் தேதி வரை 5 நாட்கள் ரேசன் கடைகள் செயல்படாது என்றும், ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை பெறாதவர்கள், வரும் 27 ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »