Press "Enter" to skip to content

1000 ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியது- எந்தெந்த பகுதி மக்களுக்கு கிடைக்கும்?

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண உதவி இன்று முதல் வழங்கப்படுகிறது.

சென்னை:

கொரோனா தடுப்பு நடவடிக்கையான சென்னை நகரப்பகுதிகள் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளில் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

அதன்படி இன்று நிவாரண உதவி வழங்கும் பணி தொடங்கியது. மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று ரேசன் கடை பணியாளர்கள், இந்த உதவித்தொகையை வழங்கி வருகின்றனர்.

எந்ததெந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

* பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகள்

* திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகள், மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள்

* செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிகள் மற்றும் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள்.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள்.

இதுதவிர மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக அரசு வழங்க உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »