Press "Enter" to skip to content

லண்டனில் இருந்து டெல்லி, மும்பைக்கு செப்டம்பர் 2-ல் இருந்து விமான போக்குவரத்து: விர்ஜின் அட்லான்டிக்

லண்டனில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு மீண்டும் செப்டம்பர் 2-ந்தேதியில் இருந்து விமான போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக விர்ஜின் அட்லாண்டிக் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து ஏறக்குறைய உலகளவில் விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது. மற்ற நாட்டைச் சேர்ந்த நபர்கள் மீட்பதற்காகவும், மருத்துவ பொருட்களை கொண்டு செல்வதற்காகவும் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி தடைவிதிக்கப்பட்டது. கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்குவதற்கான பேச்சுவார்த்தையை அடுத்த மாதம் தொடங்குவோம் என்று இந்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மும்பை மற்றும் டெல்லியில் இருந்து லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு செப்டம்பர் 2-ந்தேதியில் இருந்து விமான போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக விர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவனம் தெரிவித்துள்ளார்.

விர்ஜின் அட்லான்டிக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘பயணிகள் விமான சேவையை மேலும் 17 இடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளோம். டெல்லி, மும்பையில் இருந்து செப்டம்பர் 2-ந்தேதி லண்டர் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு சேவை தொடங்கும். மேலும், அமெரிக்காவில் உள்ள பல இடங்களுக்கும் இணைப்பை வழங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »