Press "Enter" to skip to content

11 மணி நேரம் நீடித்த இந்தியா-சீன கமாண்டர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நிறைவு

புதுடெல்லி:

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்புகாயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை நிலவி வருகிறது. போரை எதிர்கொள்ளும் அளவிற்கு படைகள் தயாராகி வருகின்றன.

அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, முதல்கட்டமாக எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவு எட்டப்படாத நிலையில், நேற்று இருநாட்டு ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சீனாவின் மால்டோ பகுதியில் பேச்சுவார்த்தை நடைபெற்ற ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 12 மணியளவில் நிறைவடைந்ததாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 11 மணி நேரம் நீடித்ததாக இந்திய-சீன கமாண்டர்கள் இடையிலான இந்த பேச்சுவார்த்தையில் பங்கோங் டெசோ பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீன படைகள் பின்வாங்க வேண்டும் எனவும் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீன படைகள் பின்வாங்க வேண்டும் எனவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவம் தளவாடங்களை தொடர்ந்து குவித்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »