Press "Enter" to skip to content

மெக்சிகோவில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் சுகாதார குழுவினர்

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

மெக்சிகோ சிட்டி:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 98 லட்சத்தைக் கடந்துள்ளது. 4.94 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 53 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ 11-வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், மெக்சிகோவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஒரு லட்சத்து16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »