Press "Enter" to skip to content

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி பூரண குணமடைந்து வீடு திரும்பினார்

கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

புதுடெல்லி:

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு (வயது 55) திடீரென கடுமையான காய்ச்சல் மற்றும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்ததை தொடர்ந்து, அவர் டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதற்கிடையே அவருக்கு நிமோனியாவும் இருப்பது தெரியவந்ததால், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றம் ஏற்படாததால், டெல்லியில் உள்ள மேக்ஸ் என்ற தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், அவருடைய உடல்நிலை சீராக இருந்து வந்தது.

இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்த சத்யேந்திர ஜெயின் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி நேற்று வீடு திரும்பினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »