Press "Enter" to skip to content

கர்நாடகாவில் வரும் 29-ம் தேதி முதல் ஊரடங்கு நேரம் மாற்றி அமைப்பு

கர்நாடகாவில் வரும் 29-ம் தேதி முதல் இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் புதிதாக 918 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11,923 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 11 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது.  

இதுதொடர்பாக, முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், கர்நாடகாவில் இதுவரை ஊரடங்கு நேரம் இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரை இருந்தது.  வரும் 29-ம் தேதி முதல் இரவு ஊரடங்கு 8 மணி முதல் காலை 5 மணிவரை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், வரும் ஜூலை 10-ம் தேதியில் இருந்து அனைத்து அரசு அலுவலகங்களும், அனைத்து சனிக்கிழமைகளிலும் மூடப்பட்டு இருக்கும். ஜூலை 5-ம் தேதியில் இருந்து அடுத்த உத்தரவு வரும்வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகம் திரும்புவர்கள் 7 நாட்கள் முகாமில் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவித்துள்ள கர்நாடக அரசு, மேலும் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »