Press "Enter" to skip to content

பாகிஸ்தானில் 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் ஒரே நாளில் 3,138 பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது.

இஸ்லாமாபாத்:

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது.

தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,883 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அங்கு கொரோனாவால் ஒரே நாளில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் 12 வது இடத்தில் உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »