Press "Enter" to skip to content

சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் நிவாரண நிதியம் பணம் பெற்றது எப்படி நியாயம்? – ப.சிதம்பரம்

சீன நிறுவனங்களிடம் இருந்துபிரதமரின் நிவாரண நிதியம் பணம்பெற்றது, எப்படி நியாயம்? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி:

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

2005-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ.1 கோடியே 45 லட்சம் நன்கொடை பெற்றது தவறு என்றால், 2020-ம் ஆண்டில் சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள ‘பி.எம்.-கேர்ஸ்’ (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்) நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்?

சீனா எப்போது ஊடுருவியது? 2013, 2014, 2018, 2020-ல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்கு பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா?

2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுக்கிறார்கள். அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? சீன அதிபர் ஜீயும், இந்திய பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »