Press "Enter" to skip to content

33 சதவீத பணியாளர்களுடன் வங்கிகள் இன்றும், நாளையும் செயல்படும்

10 நாட்களுக்கு பின்னர் 33 சதவீத பணியாளர்களோடு 29-ந்தேதி (இன்று) மற்றும் 30-ந்தேதி (நாளை) ஆகிய நாட்களில் மட்டும் வங்கிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

வங்கிகள் இன்றும், நாளையும் செயல்படும்

10 நாட்களுக்கு பின்னர் 33 சதவீத பணியாளர்களோடு 29-ந்தேதி (இன்று) மற்றும் 30-ந்தேதி (நாளை) ஆகிய நாட்களில் மட்டும் வங்கிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

சென்னை :

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 19-ந்தேதி முதல் 30-ந்தேதி (நாளை) வரை 12 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து வேறு எந்த பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் வங்கி சேவைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 33 சதவீத பணியாளர்களோடு 29-ந்தேதி (இன்று) மற்றும் 30-ந்தேதி (நாளை) ஆகிய நாட்களில் மட்டும் வங்கிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.இதன்படி இன்றும், நாளையும் வங்கிகள் குறைவான பணியாளர்களோடு செயல்பட உள்ளன. 10 நாட்களுக்கு பின்னர் வங்கிகள் திறக்கப்பட உள்ளதால், பல்வேறு பரிவர்த்தணைகளுக்காக பொதுமக்கள் படையெடுப்பார்கள் என்று தெரிகிறது. இதை எதிர்கொள்ள வங்கி நிர்வாகங்களும் தயாராகி வருகின்றன.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »