Press "Enter" to skip to content

கராச்சி பங்குச்சந்தை அலுவலக தாக்குதல் – உயிரிழப்பு 10 ஆக உயர்வு

பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

கராச்சி: 

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகம் நேற்று காலை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது ஆயுதங்களுடன் அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்டனர். 

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டதில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 பாதுகாப்பு காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்,

பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், கையெறிகுண்டுகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

அலுவலக பணியாளர்கள் அனைவரையும் வெளியேற்றிய போலீசார், அப்பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்திருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகளும் இந்த அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதிகள் என  தெரிய வந்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »