Press "Enter" to skip to content

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரை

கொரோனா ஊரடங்கு, லடாக் மோதல் மற்றும் சீன செல்போன் செயலிகளுக்கு தடை போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துவது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இது பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிக்கப்பட்டபோது பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வந்தார்.

தற்போது நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதில் 2-ம் கட்ட தளர்வுகள் நாளை (புதன்கிழமை) அமலுக்கு வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் நேற்று தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தது.

கொரோனா ஊரடங்கு, லடாக் மோதல் மற்றும் சீன செல்போன் செயலிகளுக்கு தடை போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கு மத்தியில் பிரதமர் உரை நிகழ்த்துவது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »