Press "Enter" to skip to content

பாஜக மாநில துணைத்தலைவரானார் விபி துரைசாமி

திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமி தமிழக மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை:

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்த நிலையில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கி அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையடுத்து பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வி.பி.துரைசாமி எல்.முருகனை சந்தித்து பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

இந்த நிலையில் 3 ஆண்டுகள் ஆனதால் தமிழக பாஜக நிர்வாகிகளை எல்.முருகன் மாற்றம் செய்துள்ளார்.

திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில துணைத்தலைவராக நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார். பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத்தலைவராகவும் நியமித்துள்ளார்.

பாரதிய ஜனதாவில் சேர்ந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »