Press "Enter" to skip to content

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்

கள்ளக்குறிச்சியில் ரூ.381.76 கோடி மதிப்பில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னை:

தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் மொத்தம் ரூ.3,575 கோடி செலவிடப்பட உள்ளது. 

இதில் மத்திய அரசு தனது பங்களிப்பாக 60 சதவிகித நிதியையும், மாநில அரசு 40 சதவிகித நிதியையும் செலவிட உள்ளது. 

இதுவரை 8 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், 9-வது புதிய கல்லூரியாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவாங்கூரில் ரூ.381.76 கோடி மதிப்பில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர்  அடிக்கல் நாட்டினார்.

கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டால், தமிழகத்துக்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »