Press "Enter" to skip to content

‘நன்றி எனது நண்பரே’ நரேந்திர மோடிக்கு டொனால்டு டிரம்ப் டுவிட்

அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்:

அட்லாண்டிக் கடல்பகுதியில் அமைந்திருந்த நியூஜெர்சி, தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா ஜார்ஜியா உள்ளிட்ட 13 குடியேற்ற பகுதிகள் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்து 1770-ம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி விடுதலை பெற்றன. இதையடுத்து இந்த மாநிலங்களை உள்ளடக்கி அமெரிக்கா தனி நாடாக உருவெடுத்தது.

இதனால், ஆண்டு தோறும் ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் அமெரிக்காவின் 244-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். 

அதில்,’அதிபர் டிரம்பிற்கும் அமெரிக்க மக்களுக்கும் 244-வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக, இந்த நாளில் சுதந்திரத்தையும் மனிதத்தையும் மதித்து கொண்டாடுகிறோம்’’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்திய பிரதமர் மோடியின் வாழ்த்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள பதில் செய்தியில், ”நன்றி எனது நண்பரே… இந்தியாவை அமெரிக்கா விரும்புகிறது’’ என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »