Press "Enter" to skip to content

ஒரே நாளில் 2,214 பேர் டிஸ்சார்ஜ் – 60 ஆயிரத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாநிலத்தில் வைரசில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 280 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 1 ஆக அதிகரித்துள்ளது.  

இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு

சிகிச்சைபெறுபவர்களும் உள்ளடக்கம். 

மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,450 பேர் பலியாகியுள்ளனர்.

ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் நேற்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 2 ஆயிரத்து 214 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்து 592 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

அரியலூர் – 439

செங்கல்பட்டு – 3,220

சென்னை – 41,309

கோவை – 275

கடலூர் – 856

தர்மபுரி – 50

திண்டுக்கல் – 315

ஈரோடு – 81

கள்ளக்குறிச்சி – 465

காஞ்சிபுரம் – 926

கன்னியாகுமரி – 221

கரூர் – 124

கிருஷ்ணகிரி – 67 

மதுரை – 994

நாகை – 106

நாமக்கல் – 90

நீலகிரி – 44

பெரம்பலூர் – 156

புதுக்கோட்டை – 79

ராமநாதபுரம் – 359

ராணிப்பேட்டை – 537

சேலம் – 337

சிவகங்கை – 161

தென்காசி – 207

தஞ்சாவூர் – 310

தேனி – 268

திருப்பத்தூர் – 87

திருவள்ளூர் – 2,895

திருவண்ணாமலை – 1,107

திருவாரூர் – 329

தூத்துக்குடி – 815

திருநெல்வேலி – 635

திருப்பூர் – 125

திருச்சி – 463

வேலூர் – 537

விழுப்புரம் – 604

விருதுநகர் – 346

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு – 206

உள்நாடு – 123

ரெயில் நிலைய கண்காணிப்பு – 324

மொத்தம் – 60,592

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »